
sttu.org.sg
sttu.org.sg


2025
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 2025-ஆம் ஆண்டு நடவடிக்கைகள்
இணையவழிக் கருத்தரங்கு
மே 22-ஆம் தேதி கல்வி அமைச்சின் மனிதவளப் பிரிவும் நான்கு ஆசிரியர் சங்கங்களும் இணைந்து ‘Take Charge of your Growth’ என்னும் தலைப்பிலான இணையம் வழி கருத்தரங்கை நடத்தின. தமிழாசிரியர் சங்க உறுப்பினர்களும் அதில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஒருங்கிணைப்பில் மதுரை மற்றும் கொடைக்கானலுக்குக் கல்வி மற்றும் பண்பாட்டு முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்கநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகத்தின் முதன்மை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் என 29 ஆசிரியர்கள் இந்தக் கற்றல் முகாமில் கலந்துகொண்டனர்.
ஏழு நாள்கள் நடந்தேறிய இந்தக் கல்வி மற்றும் பண்பாட்டு முகாமில் ஆசிரியர்கள் ஒன்பது பயிலரங்குகளிலும், முக்கியக் கல்வி நிறுவனங்கள், பண்பாட்டு மையங்கள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு மேற்கொள்ளப்பட்ட கற்றல் பயணங்களிலும் கலந்துகொண்டனர்.
ஆசிரியர்களின் கற்றலை மேம்படுத்தவும் அதிகமானோர் இந்தக் கல்வி, பண்பாட்டு முகாமைப் பற்றி மேலும் அறிந்துகொண்டு பயன் பெறுவதற்கும் 2025, மார்ச் மாதம் 26-ஆம் தேதியன்று உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய மண்டபத்தில் நம் சங்கம் ஒரு பகிர்வரங்கத்தை நடத்தியது.
இந்தப் பகிர்வரங்கின் நோக்கங்கள் பின்வருமாறு.
1) பங்கேற்பாளர்கள் தாங்கள் கற்றுக்கொண்டவற்றை மற்ற ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்ளுதல்.
2) வகுப்பறையில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைப் பல்வேறு கற்றல் வளங்களைக் கொண்டு மேம்படுத்துதல்.
மலாக்கா மகிழ்வுலா
அயராது உழைக்கும் சங்க உறுப்பினர்களின் நலனை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வதற்கும் கற்பதற்கும் மலாக்காவிற்கு மகிழ்வுலா ஒன்றிற்கு சங்கச் செயலவையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆசிரியர் தினத்தின் வார இறுதியைத் தமிழாசிரிய நண்பர்களோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் நினைவிலிருந்து நீங்கா அனுபவத்தைப் பெறவும் 2025 செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை சலுகைக் கட்டணத்தில் இப்பயணத்தைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த மகிழ்வுலாவில் 13 உறுப்பினர்கள் கலந்துகொண்டு 3 நாள்களை மகிழ்ச்சியாகக் கழித்தனர்.




